நீ கவிதை எழுதும் போது
மூக்கை விரலால் அழுத்திக் கொயள்வாயா?
அல்லது துணிகொண்டு
கட்டிக்கொள்வாயா?
அருவருப்பான நாற்றம் வீசுகிறது
உன் கவிதைகளில்
இது போல வார்த்தைகளைத் தேடித்தேடி
வலிந்து எழுதுகிறாய்.
கோபத்தில் எதார்த்த வார்த்தைகளைப்
பதிவதான பம்மாத்து.
உன் கவிதைகளை
சிலாகித்து எழுதுவோரின்
எழுத்தில்,
மீன் கடையைக் கழுவி விட்டது போல
வீச்சம் அடிக்கிறது.
உன் கவிதை கிடைக்காதவர்கள்
பாக்கியவான்கள்
அவர்கள் மூக்கை மூட
வேண்டியதில்லை.
9
அந்த மாச கவிதையும்
மளிகை லிஸ்ட்டும் எழுதியாயிற்று
மளிகை லிஸ்ட் தபாலிலும்
கவிதை கடைக்குமானப்
பாதை மாறியப் பயணம்.
பத்திரிகை ஆசிரியர் சொன்னார்
"அவ்வ்வ்வளவு பெரிய கவிஞ்ஞன்
சும்மாவா எழுதியிருப்பான்
போடப்பா"
மளிகை கவிதை பிரசுரமானது
'உடன் கொடுத்தனுப்பவும்'
என்ற கடைசி வரியில்
முழு கவிதையும் குந்தியிருப்பதாக
கனடாவிலிருந்து வந்து விழுந்தது
கடிதம் ஒன்று.
No comments:
Post a Comment