Pages

Friday, December 24, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-8)

 11

வத்தகுழம்பு, சுட்ட அப்பளம்,

மோருஞ்சா,நார்த்தங்காய் ஊறுகா என,

செரிமானமாகா புளிச்சேப்ப

சுக செளகரிய வாழ்வின் நடுவே,

திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்

கொண்டே

புராண, இதிகாச, தாந்ரீக, மாந்ரீகக்

கதைகள் சொன்ன நீயேதான்,

இன்று . . .

பத்திரமான பணியில், மாச ஊதியத்தில்

நிச்சயப் பென்சனில்,

காலாட்டிக் கொண்டு, கவிதை

செய்கிறாய்

என்றால் உனக்குக் கோபம் வரும்

என்ன செய்ய,

என்பிழைப்பு நாய்ப் பிழைப்பு

அன்று போலவே.


12

வார்த்தைகளைப் பிரிக்கிறாய்,

முரண்களை இணைக்கிறாய்,

எதயோ ஒளித்து வைத்திருப்பதாக

ஜாலம் பண்ணுகிறாய்.

எங்கு வாங்கினாய் இந்தப் பேனாவை?

வீசி எறி,

வாலிப வயோதிக அன்பர்களை

லாட்ஜ்க்கு அழைத்து லேகியம்

விற்கலாம்.

வாஸ்த்து, ராசிக்கல், பெயர் மாற்றம்,

கைரேகை,

எவ்வளவு இருக்கிறது!

ஏன் இப்படி கவிதை செய்கிறாய்?

உனக்கும் லாபம் இன்றி.

எனக்கும் லாபம் இன்றி.

வா. . . . .
லேகியம் விற்போம்.

Tuesday, December 21, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-7)

 10
நான் எம்பாட்டுக்கு
கவிதை படித்துக் கொண்டிருந்தேன்.
(ஐம்பது ஆண்டுகளாய்)
நீதான் எழுத வைத்தாய்.
எனக்கும் கவிதை எழுத வராது
உன்னைப் போலவே.
மனவக்கரிப்புகளைச்
சிடுக்கு முடுக்கான வார்த்தைகளால் (எருமை குட்டிச் சுவரில் உரசுவது ஒப்ப),
சுகச் சொறிச்சலாகச் சொறிந்து
கொண்டிருக்கிறாய் நீ.
நானோ,
எரிச்சலில் திட்டிக் கொண்டிருக்கிறேன்.
புரிகிறதா. . .
நீ கவிஞனில்லை.
நானும் கவிஞனில்லை.
நான் எம்பாட்டுக்கு
கவிதை வாசித்துக் கொண்டிருந்தேன்.

Saturday, December 18, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-6)

                                                     8

நீ கவிதை எழுதும் போது
மூக்கை விரலால் அழுத்திக் கொயள்வாயா?
அல்லது துணிகொண்டு
கட்டிக்கொள்வாயா?
அருவருப்பான நாற்றம் வீசுகிறது
உன் கவிதைகளில்
இது போல வார்த்தைகளைத் தேடித்தேடி
வலிந்து எழுதுகிறாய்.
கோபத்தில் எதார்த்த வார்த்தைகளைப்
பதிவதான பம்மாத்து.
உன் கவிதைகளை
சிலாகித்து எழுதுவோரின்
எழுத்தில்,
மீன் கடையைக் கழுவி விட்டது போல
வீச்சம் அடிக்கிறது.
உன் கவிதை கிடைக்காதவர்கள்
பாக்கியவான்கள்
அவர்கள் மூக்கை மூட
வேண்டியதில்லை.


               9

அந்த மாச கவிதையும்
மளிகை லிஸ்ட்டும் எழுதியாயிற்று
மளிகை லிஸ்ட் தபாலிலும்
கவிதை கடைக்குமானப்
பாதை மாறியப் பயணம்.
பத்திரிகை ஆசிரியர் சொன்னார்
"அவ்வ்வ்வளவு பெரிய கவிஞ்ஞன்
சும்மாவா எழுதியிருப்பான்
போடப்பா"
மளிகை கவிதை பிரசுரமானது
'உடன் கொடுத்தனுப்பவும்'
என்ற கடைசி வரியில்
முழு கவிதையும் குந்தியிருப்பதாக
கனடாவிலிருந்து வந்து விழுந்தது
கடிதம் ஒன்று.

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-1)

                   2
தூக்கம் வருவதற்குள்
ஒரே ஒரு கவிதை
'யோசிக்காமல்
நீ பாட்டுக்கு எழது கவிதை தானேவரும்'
"வெட்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சி
மரத்தின் பக்கம்
மறைந்ததது
மூத்திரம் போக".
எழுதி
அவனிடம் இவனிடம் நீட்ட
அபார உருவகம் என்றான்கள்.
கவிதை சுலபமே!                 3
மாச இலக்கிய நீள அகல(ஆழ)
பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.
'இரண்டு பக்கம் மேட்டர் வேணும்'
ஒரு பக்கம் கறுப்பு வெளுப்பில்
இன்னதென்று புரியா படம்போடு
'சர... இன்னொரு பக்கம்...?'
கவித... கவித போடு.
'கவித கைவசம் இல்ல'
சித்தப் பொறு தாரேன்.
"எனக்கும் அவளுக்குமான,
அவளுக்கும் எனக்குமான 
இடையில் பூத்த
சிலந்திப் புஷ்பம் வடித்தது
தேனா? விமா?
மெளனம் மலர்த்திய இரவுகளில்
வார்த்தைகள் அடைகாத்தன.
தூ...வெனத் தட்டி எழுந்தாள்
தட்டப்பட்டது நான? சிலந்தியா?"
'அபார கவித'
அப்பப் போடு கவிதய
என்பேரில்.

Friday, December 17, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-5)

உன்னை புரிந்து  கொள்ள 
என்  மூளையைக் கசக்கனுமோ?
"பாதம் தொட்டப் பாதை
'பார்த்துப்போ' என முனுத்தது,
வெளிச்சப் பறவையின் இருட்டுச்சிறகு (அல்லது)
இருட்டுப்பறவையின் வெளிச்சச்சிறகு
முகம் அறைந்துச்சென்றது.
தூரத்து வானம் தான் பூசிக் கொண்டிருந்த
வண்ணம் வெளுத்தது.
பாதையோர மரம் ஒன்று
ஒற்றைப் பழுப்பு இலையைத் தவறவிட்டது
கண்ணீர் துளி போல.
சருகில் அமர்ந்திருந்த ஓணான்
தலை ஆட்டிப் பெருமூச்சு விட்டு நகர்ந்தது."
அடேய் . . . நிறுத்து!
என்ன மொழி இது?
உனக் கென்ன ஜென்குரு என்ற நினைப்பா?

Thursday, December 16, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-4)

இடுப்புக் குழந்தையுடன்
வாசலில் ஒருத்தி
அம்மா. . . பசிக்குதென்றாள்
நான்,
மிகு இரக்கத்துடன்
ஏந்திய பாத்திரத்தில்
கவிதையைப் பிச்சையாகப்
போட்டேன்.
ஆவலுடன் எடுத்து மென்ற குழந்தை
திகைத்து அழுதது.
அவள் இன்னும் பசிக்கு தென்றே
கூறிக் கொண்டிருக்கிறாள்
கவிதையைத்
தின்னத் தெரியாதவள்...  

                                                       - பரிதிபாண்டியன்                       

Tuesday, December 14, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-3)

                                                6
நீ எழுதும்
அருவருப்பூட்டும் வார்த்தைகளை
நீயே கூட
உரையாரலில் பயன்படுத்தக்
கூசுவாய்.
எழுத்தில் ஏன் அப்படியேப்
பதிகிறாய்?
. . . . நீ மரபுகள் தகர்ப்பவனல்லவா?!
மரபு மீறுதல் என்பது
இப்படியான அசிங்கமாகுமா?
யார் உனக்குத் தவறாகச்
சொல்லித் தந்தது?
இடக்கரடக்கல் என்பது
இலக்கணமல்ல,
அது மொழிதல் நாகரிகம்
என்பதை அறியாய?
                                                                                                - பரிதிபாண்டியன்
                                    
                                    

Thursday, December 9, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-2)

4


ஏத்து வாளிகள்
மாசா மாசம் அறிவாளிகளின்
கண்ணுக்கு மட்டுமேத் தெரிவதான
மாய ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
அறிவு ஜீவி அரசர்கள்
மாய ஆடை தரித்து
அம்மணமாய் அலைகிறார்கள்.
முட்டாள் குழந்தை மாத்திரம்
கை கொட்டிச் சிரிக்கிறது.
  
5

"புரிந்ததா உறுமினார்"
ஆசிரியர்
"புரியாதவன் கைதூக்கு"
எல்லோருக்கும்
புரிந்திருந்தது
அதிலும் முன்வரிசை மாணவர்க்கு
ஆசிரியரை விடவும்
புரிந்திருந்தது.
மெல்லத் தயக்கத்துடன்
உயர்ந்த ஒரு கைக்குக் கிடைத்தது
"அறிவு கெட்ட முண்டம்"
என்ற பட்டம்.

                            - பரிதிபாண்டியன்                
                    

Friday, December 3, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!

என்னுரை


                    கவிஞ
                          வணக்கம், இத்தொகுப்பினை வாசிக்கும்போதும், வாசித்துமுடித்த பின்னும் உனக்கு என்மீது சினம் வரலாம் நீ சினந்தாயனால் இவை உன்னை பற்றியதாகத்தான் இருக்க அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சியே.

                                      இப்படியானதொரு தொகுப்பை வெளியிடவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று உனக்குள் ஒரு கேள்வி்எழலாம். இதுவரையில் நீ எழுதியுள்ள அனைத்துக் கவிதைகளையும் வாசித்துப்பார். உன் கவிதைகள் சாதித்ததென்ன? உனக்கு கவிஞன் பட்டம் தந்தது தவிர.

                                          வருடத்திற்கு ஏறத்தாழ கணக்கிட்டாலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் தமிழ்நாட்டில் வெளியாகின்றன. மேலும் சிறிய,பெரிய பத்திரிகைகளில் ஒவ்வொரு மாதமும் வாரமும் கவிதைகள் பிரசுரமாகின்றன. இவற்றையெல்லாம் வாசிப்பவர் எவர்? நூலகங்களில் அடுக்கு கலையாது அழுக்கேயாகாது புத்தம் புதியதாகத் தீண்டமப்படாமலே கிடக்கும் கவிதைநூல்கள் எத்தனை? ஆண்டுக்காண்டு இதன் எண்ணிக்‌‌‌‌கை  பெருகிக் கொண்டே இருக்கிறது. கவிஞர்கள் ‌   ‌‌பெருகிய அளவு கவி‌‌தை வாசிப்பவர் பெருகவில்லை. இதன் காரணம் என்ன? என்‌றேனும் சிந்தித்திருக்கிறாயா? 
                                           

                                        வாசிப்பு என்பது வெவ்வேறு தளங்களில் பரந்து பட்டு தேடல்களாக மாறிக்கொண்டிருக்ககிறது. நீ இன்னும் "வண்ணத்துப்பூச்சிக்கு  வாசனை  உண்டா?" என்று கேட்டுக்கொண்டிருக்கிறாய். சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களுக்கு ஏற்பட்ட அதே சோகம் அவற்றிற்கு முன்பே கவிதைக்கு ஏற்பட்டு விட்டது.

                                             தவிரவும்,  நீ  எழுதும்  கவிதைகள் ஒன்று புரியாமல் இருக்கிறது அல்லது கூச்சலிடுகிறது. புரியக் கூடாதென்றெ எழுதப்படுபவையாக இருக்கிறது அதற்கு நீ இருண்‌மை என்றும் பின் நவீனத்துவம், நினைவோடை என்றும் ஏ‌தே‌தோ ‌பெயர் சூட்டுகிறாய் உன்   மனஉளைச்சல்களையெல்லாம் காது‌கொடுத்துக் ‌கேட்க இங்கு யாரும் தயாராக இல்லை. அதீத உணர்ச்சி வசப்பட்டது ‌போல கோஷம் ‌போடுகிறாய் உன் உணர்ச்சிகளுக்கு நீ‌யே கூட உண்‌மையானவனாக இல்‌லை. வேஷம் ‌போடுகிறாய். ‌போலியான வார்த்‌தைகளில் உன் கவி‌தைகள் சலனமற்று சவம் போலக் கிடக்கிறதுது. நீ யாருக்காக கவி‌தைகள் எழுதுவதாகக் கூறுகிறா‌யோ அவர்களுக்கு உன் கவி‌தைகள் எட்டுவ‌‌தே இல்‌லை என‌‌வே கவி‌தை அந்நியப்பட்டு நிற்கிறது.


                     மட்டுமல்லாமல் மகாகவி பாரதி, பாரதிதாசன் போன்‌றோரின் வீரியமிக்கவரிகள் கூட அதிகமான  மேடைகளில் அடிக்கடியும் எடுத்தாளப்பட்டதாலும், எடுத்தாள்வோர் சும்மாவும் மேடை அலங்காரத்திற்காக உபயோகித்தமையாலும் அவ்வாறானவர்களின் உன்னதமான கவிதை வரிகள் கூட நீர்த்துப் போய்விட்டன. இதில் நீ வேறு கவிதைகளாக எழுதிக் குவிக்கிறாய் இயந்திரம் போல்.


    கவிஞ,
                      ஒரு நாதசுரவித்வானின்  இசை  நமக்குள்  பரவசமேற்படுத்துகிறது. தனித்தவில் ஒலி கூட நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. அதிர ஒலிக்கும் ஓரே சீரான பறை ஒலி கூட நம்‌மை ஆடத்துண்டுகிறது. ஏன் சினிமாப்பாடலின் சிலவரிகள் கூட சிலாகிப்பதாகவும் அ‌மைந்து விடுகிறது.  நாதசுரம், தவில், ப‌றை சினிமாப்பாடல் என்பதால் என்‌னைப்பாமரன் என்று நீ ‌கேலியாகப் பார்ப்பது ‌தெரிகிறது. ஆம் பாமரன் தான் இந்த பாமர‌னை உன் கவி‌தைகள் என்ன ‌செய்யப்போகிறது. இந்த பாமரனுக்கு உன் கவி‌தைகளில் என்ன ஒளித்து‌வைத்திருக்கிறாய்? 


            உன் கவி‌தைக‌ளை வாசித்துக் ‌கொண்டு வரும் ‌பொழு‌தே மேல்வரி மறந்து விடுகி‌றதே நீ எனக்கு அந்நியமான ‌மொழியில் ‌பேசுகிறா‌யே, என்ன செய்வது.


இ‌தைப்படி,


             கவி‌தையின் ‌நோக்கம் உவ‌கை ஏற்படுத்துவதும்அறிவுறுத்துவதும், என நி‌ைவில் பதியும் படியாய் “ஹொரேஷ்  ‌ சொன்னார். உவ‌கை நிச்சயம் இருக்க ‌வேண்டு‌மென நி‌னைக்கி‌றேன். உவ‌கையின்றி எதற்குப் பொருட்படுத்த ‌‌வேண்டும்? ஒரு கவிதை‌யை வாசித்தல் இனி‌மை தருவதாகவும் சுவராஷ்யமாகவும் இல்லலையெனில், ‌வேறு ஏதாவது ‌செய்யலா‌மே. ஒரு க‌லைப்ப‌டைப்பு அழகாயில்‌லை என்றால் இ‌தைக் கொண்டு உச்சபட்சமாய் முரண்டுபிடிக்கும் இருண்‌மைக் கவி‌தைகள் உருவாகலாம். அ‌தை நாம் கவனிக்க மாட்‌டோம் (நன்றி புதிய காற்று ‌செப்டம்பர் 2008 பக், 37- அடிக்‌கோடு என்னு‌டையது).


               உன் கவி‌தை உற்சாகமாகவும்,   சுவராஷ்யமாகவும், அழகாகவும் இல்‌லை மட்டுமின்றி பிரோயோ‌ஜனமற்றதாகவும் இருக்கிறது.


               உன் கவி‌தை அலுப்புட்டுகிறது, க‌ளைப்‌பேற்படுத்துகிறது, எரிச்சல் பட‌வைக்கிறது. என‌வேதான் ‌சொல்கி‌றேன்.

      நிறுத்து......
                                                                                                                     என,
                                                                                           ப.பரிதிபாண்டியன்.                                           1

நானும் முயல்கிறேன்
கவிதை செய்ய.
புரிந்து விடுகிறது உனக்கு,
எனக்கும் கூட.
புரியச் செய்வது
கவிதையாகதே!
நான் எங்ஙனம் 
கவிஞனாவது?

                                                                                               
                                                               

Wednesday, December 1, 2010

கவித...எழுதுறாங்கோ

                         சகோதரி,
                                                         உன் கவிதை வாசிக்கக் கிடைத்தது.
                                                            மகா பாக்கியம்.
                                                            உடல்,மன அவஸ்த்தைகளைப்
                                                            பட்டியலிடுகிறாய்,
                                                            எனக்கு அப்ப்ப்படியிருக்கிறதாக்கும் என
                                                            உடல் முறுக்குகிறாய்.
                                                            இது பற்றியெல்லாம் உன் நட்புகளிடம் கூடப்
                                                            பகிறாய்.
                                                            "என்ன... இப்படியெல்லாம் எழுதுகிறாய்?"
                                                            என்றால்,
                                                            "தாக்குவென்கொல்... முட்டுவென்கொல்" என
                                                            அவ்வைத் துணையுடன் வந்து,
                                                            நியாயம் கத்துவாய்.
                                                            ஒன்றுசெய் சகோதரி,
                                                            உடன் மனோதத்துவ டாக்டரைப்பார்.
                                                            எங்கள் பக்கம் ஒருத்தன் இருக்கான்
                                                            இதையெல்லாம் வேப்பிலை அடித்தே
                                                            ஓட்டி விடுவான்.
                                                            எனக்கே அதில் நம்பிக்கையில்லை
                                                            உனக்கு சிபாரிசு செய்யேன்.
                                                            ஆனால்,
                                                            தெருவில் ஒரு கிழவி இருக்கிறாள்
                                                            மோசமான வாய்,
                                                            படிக்கத் தெரியாது.
                                                            அவளுக்கு மட்டும் படிக்கத் தெரிந்து
                                                            உன்னைப் புரிந்தும் கொண்டாளாயின்
                                                            வாயிலிருந்து வரும்பார் வசவு,
                                                            வேண்டாம்  நீ   தாங்காய்...
                                                            சகோதரி,
                                                                       கொஞ்சம் அனுசரிச்சு எழுதேன்.
..

                                                                                                                                                                                                                                                          -பரிதிபாண்டியன்
                                                                                                                                     
Tuesday, November 23, 2010

கதை கதையாம் காரணமாம்

                                         "ராட்ச்சனோட குகைய
                                         அக்காவும் தம்பியும் மெதுவா
                                         எட்டிப் பார்தாங்க,
                                         ராட்ச்சன் கொர்ர்...புர்ர்...ன்னு
                                         கொரட்டவுட்டுத் தூங்கிட்டு இருந்தான்...
                                        அவனோட கை ஒவ்வொன்னும்
                                         பனமரந் தண்டி இருந்திச்சி...
                                        காலு ஒவ்வொன்னும்
                                        ஆல மரந்தண்டி இருந்திச்சி...
                                        பல்லு மொறம் மாதிரி இருந்திச்சி...

                                        அங்கப் பார்த்தா... அண்டாஅண்டாவா
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        வாளிவாளியா சாம்பாரு... சட்டினி...
                                        அக்காவுநு தம்பியும் அவுக்கு அவுக்குன்னு
                                        தின்னாங்க...
                                        வயிறுமுட்டமுட்டத்தின்னாங்க...
                                        அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
                                        வேணுமேனிட்டு,,, ராட்ச்சனோட
                                        வேட்டி ஒன்ன எடுத்து
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        அல்லாத்தையும் மூட்டையாக்கட்டி
                                       அக்காக்காரி தலையில தூக்கிக்கிட்டா...
                                        தம்பி ரண்டு வாளிய எடுத்து
                                       சாம்பாரு... சட்டினிய ஊத்திக்கிட்டான்...
                                      அக்காவுந்தம்பியும் எடுத்தாங்க பாரு
                                       ஒட்டம்... வூடு வந்துதான் நின்னாங்க..."                                        மூன்றாம் வகுப்புத் தோழிகளுக்கு
                                        நான்காம் வகுப்பு கமலி
                                        கதை சொல்லிக் கொண்டிருந்தாள்,
                                        வாயிலூறும் எச்சிலை விழுங்கியபடி.

                                        எங்கோ கவனம் போல
                                        கதையைக் கவனித்துக்
                                        கொண்டிருந்த ஆசிரியை
                                        கமலியின் தலைவருடி
                                        "காலயில என்னம்மா சாப்பிட்ட?"
                                        என்றாள்
                                        "பழையது டீச்சர்" என்று
                                        பதில் வந்த்து.


      
                                                              
              - ப. பரிதிபாண்டியன்

Friday, November 19, 2010

ஓபாமா எங்க எம்.எல்.ஏ

      பள்ளிக் கூடத்துக்கு ஓபாமா வந்தார் எங்க கூட டான்ஸ் ஆடினார். அவரோட ஓய்ப்பும் எங்கக் கூட ஆடினாங்க சந்தோஷமா இருந்திச்சு.

 நேத்தைக்கு எங்க எம்.எல்.ஏ பள்ளியில புதுக்கட்டிடம் திறக்க வந்தார் நாங்க பூத்தட்ட வைச்சுக்கிட்டு வரிசையா நின்னோம்.எம்.எல்.ஏ வந்தோன்ன அவருமேல பூவ வீசிட்டு ஓன்னுக்கிருக்க அவசரமா ஓடினோம்.
                                                            

           பேசாம ஒபாமாவே
எங்க எம்.எல்.ஏ வா
இருந்திருக்கலாம்....                                                              ப.பரிதிபாண்டியன்

Tuesday, November 16, 2010

மனுஷ்ய ‌மைந்தர்களுக்கும் இன்ன பிற கவிதாஜீவிகளுக்கும் கவி சீ‌ரோன் மணிகளுக்கும்

உன்னிடம் அவனிடம் அவளிடம்
உவனிடம் உவளிடம்
எவனிடமாகிலும் எவளிடமாகிலும்
‌‌சொல்ல நி‌னைக்கி‌‌றேன்
‌சொல்லி விடலாம் என்‌றே நி‌னைக்கி‌‌றேன்
எவ்வளவு தந்திரமாக
இருக்கி‌றேன்
எவ்வளவு தந்திரமாக
கவி‌தை ‌செய்கி‌றேன் என்று.
எந்த இருக்கை எனக்கானது
தந்திரமாக ‌யோசிக்கி‌றேன்

நிச்சயமான மனிதர்கள்
உத்தரவாதமான பணயங்கள்
 முத்தங்களின் புரிதல்கள்
‌வெளிச்சப் பகல்கள்
தந்திரமான காரியங்களின்
உலகம் இது.

‌‌வேசியர் விடுதிகள்
கட்டணக் கழிப்ப‌றைகள்
திறந்த ‌வெளி‌மைதானங்கள்
வீடுகளின் படுக்‌கைய‌றைகள்
வகுப்ப‌றை ‌பெஞ்சுகள்
பணியிட நாற்காலிகள்
எல்லாவற்றிலும்
என் இருக்‌கை
தந்திரமாக இருக்கிறது.

‌வேசியர் விடுதி‌யோ
கட்டணக் கழிப்ப‌றை‌யோ
இவற்‌றை விட
கவி‌தை ‌மோசமானதில்‌லை

தந்திரமாக ‌யோசிக்கவும்
மந்திராம் ‌போல் வார்த்‌தைக‌ளைக்
‌கோர்க்கவும்
‌தெரிந்திருக்க ‌வேண்டும்
மட்டு மல்லாது
ஒரு பதிப்பகமும்
மாத ‌வெளியீ‌டொன்றும்
இருப்பின்
நீயும் கவி‌ஞனடா.....
அடா; அடா;அடடா;
நாலல்ல, நாற்பதல்ல, நானுறு பக்கம்
கவி‌தை     செய்யலாம்
                     பெய்யலாம்
                     நெய்யலாம்
                     ‌தைக்கலாம்
                     ‌வெட்டலாம்
                     ஒட்டலாம்
                     கி‌‌ழிக்கலாம்

                    பாரதி 
                                    மன்னித்துவிடு
                                                     நான் தந்திரமாகக்                
                                   கவி‌தை‌செய்பவன்...

Friday, December 24, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-8)

 11

வத்தகுழம்பு, சுட்ட அப்பளம்,

மோருஞ்சா,நார்த்தங்காய் ஊறுகா என,

செரிமானமாகா புளிச்சேப்ப

சுக செளகரிய வாழ்வின் நடுவே,

திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்

கொண்டே

புராண, இதிகாச, தாந்ரீக, மாந்ரீகக்

கதைகள் சொன்ன நீயேதான்,

இன்று . . .

பத்திரமான பணியில், மாச ஊதியத்தில்

நிச்சயப் பென்சனில்,

காலாட்டிக் கொண்டு, கவிதை

செய்கிறாய்

என்றால் உனக்குக் கோபம் வரும்

என்ன செய்ய,

என்பிழைப்பு நாய்ப் பிழைப்பு

அன்று போலவே.


12

வார்த்தைகளைப் பிரிக்கிறாய்,

முரண்களை இணைக்கிறாய்,

எதயோ ஒளித்து வைத்திருப்பதாக

ஜாலம் பண்ணுகிறாய்.

எங்கு வாங்கினாய் இந்தப் பேனாவை?

வீசி எறி,

வாலிப வயோதிக அன்பர்களை

லாட்ஜ்க்கு அழைத்து லேகியம்

விற்கலாம்.

வாஸ்த்து, ராசிக்கல், பெயர் மாற்றம்,

கைரேகை,

எவ்வளவு இருக்கிறது!

ஏன் இப்படி கவிதை செய்கிறாய்?

உனக்கும் லாபம் இன்றி.

எனக்கும் லாபம் இன்றி.

வா. . . . .
லேகியம் விற்போம்.

Tuesday, December 21, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-7)

 10
நான் எம்பாட்டுக்கு
கவிதை படித்துக் கொண்டிருந்தேன்.
(ஐம்பது ஆண்டுகளாய்)
நீதான் எழுத வைத்தாய்.
எனக்கும் கவிதை எழுத வராது
உன்னைப் போலவே.
மனவக்கரிப்புகளைச்
சிடுக்கு முடுக்கான வார்த்தைகளால் (எருமை குட்டிச் சுவரில் உரசுவது ஒப்ப),
சுகச் சொறிச்சலாகச் சொறிந்து
கொண்டிருக்கிறாய் நீ.
நானோ,
எரிச்சலில் திட்டிக் கொண்டிருக்கிறேன்.
புரிகிறதா. . .
நீ கவிஞனில்லை.
நானும் கவிஞனில்லை.
நான் எம்பாட்டுக்கு
கவிதை வாசித்துக் கொண்டிருந்தேன்.

Saturday, December 18, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-6)

                                                     8

நீ கவிதை எழுதும் போது
மூக்கை விரலால் அழுத்திக் கொயள்வாயா?
அல்லது துணிகொண்டு
கட்டிக்கொள்வாயா?
அருவருப்பான நாற்றம் வீசுகிறது
உன் கவிதைகளில்
இது போல வார்த்தைகளைத் தேடித்தேடி
வலிந்து எழுதுகிறாய்.
கோபத்தில் எதார்த்த வார்த்தைகளைப்
பதிவதான பம்மாத்து.
உன் கவிதைகளை
சிலாகித்து எழுதுவோரின்
எழுத்தில்,
மீன் கடையைக் கழுவி விட்டது போல
வீச்சம் அடிக்கிறது.
உன் கவிதை கிடைக்காதவர்கள்
பாக்கியவான்கள்
அவர்கள் மூக்கை மூட
வேண்டியதில்லை.


               9

அந்த மாச கவிதையும்
மளிகை லிஸ்ட்டும் எழுதியாயிற்று
மளிகை லிஸ்ட் தபாலிலும்
கவிதை கடைக்குமானப்
பாதை மாறியப் பயணம்.
பத்திரிகை ஆசிரியர் சொன்னார்
"அவ்வ்வ்வளவு பெரிய கவிஞ்ஞன்
சும்மாவா எழுதியிருப்பான்
போடப்பா"
மளிகை கவிதை பிரசுரமானது
'உடன் கொடுத்தனுப்பவும்'
என்ற கடைசி வரியில்
முழு கவிதையும் குந்தியிருப்பதாக
கனடாவிலிருந்து வந்து விழுந்தது
கடிதம் ஒன்று.

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-1)

                   2
தூக்கம் வருவதற்குள்
ஒரே ஒரு கவிதை
'யோசிக்காமல்
நீ பாட்டுக்கு எழது கவிதை தானேவரும்'
"வெட்கப்பட்ட
வண்ணத்துப்பூச்சி
மரத்தின் பக்கம்
மறைந்ததது
மூத்திரம் போக".
எழுதி
அவனிடம் இவனிடம் நீட்ட
அபார உருவகம் என்றான்கள்.
கவிதை சுலபமே!                 3
மாச இலக்கிய நீள அகல(ஆழ)
பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.
'இரண்டு பக்கம் மேட்டர் வேணும்'
ஒரு பக்கம் கறுப்பு வெளுப்பில்
இன்னதென்று புரியா படம்போடு
'சர... இன்னொரு பக்கம்...?'
கவித... கவித போடு.
'கவித கைவசம் இல்ல'
சித்தப் பொறு தாரேன்.
"எனக்கும் அவளுக்குமான,
அவளுக்கும் எனக்குமான 
இடையில் பூத்த
சிலந்திப் புஷ்பம் வடித்தது
தேனா? விமா?
மெளனம் மலர்த்திய இரவுகளில்
வார்த்தைகள் அடைகாத்தன.
தூ...வெனத் தட்டி எழுந்தாள்
தட்டப்பட்டது நான? சிலந்தியா?"
'அபார கவித'
அப்பப் போடு கவிதய
என்பேரில்.

Friday, December 17, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-5)

உன்னை புரிந்து  கொள்ள 
என்  மூளையைக் கசக்கனுமோ?
"பாதம் தொட்டப் பாதை
'பார்த்துப்போ' என முனுத்தது,
வெளிச்சப் பறவையின் இருட்டுச்சிறகு (அல்லது)
இருட்டுப்பறவையின் வெளிச்சச்சிறகு
முகம் அறைந்துச்சென்றது.
தூரத்து வானம் தான் பூசிக் கொண்டிருந்த
வண்ணம் வெளுத்தது.
பாதையோர மரம் ஒன்று
ஒற்றைப் பழுப்பு இலையைத் தவறவிட்டது
கண்ணீர் துளி போல.
சருகில் அமர்ந்திருந்த ஓணான்
தலை ஆட்டிப் பெருமூச்சு விட்டு நகர்ந்தது."
அடேய் . . . நிறுத்து!
என்ன மொழி இது?
உனக் கென்ன ஜென்குரு என்ற நினைப்பா?

Thursday, December 16, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-4)

இடுப்புக் குழந்தையுடன்
வாசலில் ஒருத்தி
அம்மா. . . பசிக்குதென்றாள்
நான்,
மிகு இரக்கத்துடன்
ஏந்திய பாத்திரத்தில்
கவிதையைப் பிச்சையாகப்
போட்டேன்.
ஆவலுடன் எடுத்து மென்ற குழந்தை
திகைத்து அழுதது.
அவள் இன்னும் பசிக்கு தென்றே
கூறிக் கொண்டிருக்கிறாள்
கவிதையைத்
தின்னத் தெரியாதவள்...  

                                                       - பரிதிபாண்டியன்                       

Tuesday, December 14, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-3)

                                                6
நீ எழுதும்
அருவருப்பூட்டும் வார்த்தைகளை
நீயே கூட
உரையாரலில் பயன்படுத்தக்
கூசுவாய்.
எழுத்தில் ஏன் அப்படியேப்
பதிகிறாய்?
. . . . நீ மரபுகள் தகர்ப்பவனல்லவா?!
மரபு மீறுதல் என்பது
இப்படியான அசிங்கமாகுமா?
யார் உனக்குத் தவறாகச்
சொல்லித் தந்தது?
இடக்கரடக்கல் என்பது
இலக்கணமல்ல,
அது மொழிதல் நாகரிகம்
என்பதை அறியாய?
                                                                                                - பரிதிபாண்டியன்
                                    
                                    

Thursday, December 9, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-2)

4


ஏத்து வாளிகள்
மாசா மாசம் அறிவாளிகளின்
கண்ணுக்கு மட்டுமேத் தெரிவதான
மாய ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
அறிவு ஜீவி அரசர்கள்
மாய ஆடை தரித்து
அம்மணமாய் அலைகிறார்கள்.
முட்டாள் குழந்தை மாத்திரம்
கை கொட்டிச் சிரிக்கிறது.
  
5

"புரிந்ததா உறுமினார்"
ஆசிரியர்
"புரியாதவன் கைதூக்கு"
எல்லோருக்கும்
புரிந்திருந்தது
அதிலும் முன்வரிசை மாணவர்க்கு
ஆசிரியரை விடவும்
புரிந்திருந்தது.
மெல்லத் தயக்கத்துடன்
உயர்ந்த ஒரு கைக்குக் கிடைத்தது
"அறிவு கெட்ட முண்டம்"
என்ற பட்டம்.

                            - பரிதிபாண்டியன்                
                    

Friday, December 3, 2010

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!

என்னுரை


                    கவிஞ
                          வணக்கம், இத்தொகுப்பினை வாசிக்கும்போதும், வாசித்துமுடித்த பின்னும் உனக்கு என்மீது சினம் வரலாம் நீ சினந்தாயனால் இவை உன்னை பற்றியதாகத்தான் இருக்க அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சியே.

                                      இப்படியானதொரு தொகுப்பை வெளியிடவேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று உனக்குள் ஒரு கேள்வி்எழலாம். இதுவரையில் நீ எழுதியுள்ள அனைத்துக் கவிதைகளையும் வாசித்துப்பார். உன் கவிதைகள் சாதித்ததென்ன? உனக்கு கவிஞன் பட்டம் தந்தது தவிர.

                                          வருடத்திற்கு ஏறத்தாழ கணக்கிட்டாலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் தமிழ்நாட்டில் வெளியாகின்றன. மேலும் சிறிய,பெரிய பத்திரிகைகளில் ஒவ்வொரு மாதமும் வாரமும் கவிதைகள் பிரசுரமாகின்றன. இவற்றையெல்லாம் வாசிப்பவர் எவர்? நூலகங்களில் அடுக்கு கலையாது அழுக்கேயாகாது புத்தம் புதியதாகத் தீண்டமப்படாமலே கிடக்கும் கவிதைநூல்கள் எத்தனை? ஆண்டுக்காண்டு இதன் எண்ணிக்‌‌‌‌கை  பெருகிக் கொண்டே இருக்கிறது. கவிஞர்கள் ‌   ‌‌பெருகிய அளவு கவி‌‌தை வாசிப்பவர் பெருகவில்லை. இதன் காரணம் என்ன? என்‌றேனும் சிந்தித்திருக்கிறாயா? 
                                           

                                        வாசிப்பு என்பது வெவ்வேறு தளங்களில் பரந்து பட்டு தேடல்களாக மாறிக்கொண்டிருக்ககிறது. நீ இன்னும் "வண்ணத்துப்பூச்சிக்கு  வாசனை  உண்டா?" என்று கேட்டுக்கொண்டிருக்கிறாய். சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களுக்கு ஏற்பட்ட அதே சோகம் அவற்றிற்கு முன்பே கவிதைக்கு ஏற்பட்டு விட்டது.

                                             தவிரவும்,  நீ  எழுதும்  கவிதைகள் ஒன்று புரியாமல் இருக்கிறது அல்லது கூச்சலிடுகிறது. புரியக் கூடாதென்றெ எழுதப்படுபவையாக இருக்கிறது அதற்கு நீ இருண்‌மை என்றும் பின் நவீனத்துவம், நினைவோடை என்றும் ஏ‌தே‌தோ ‌பெயர் சூட்டுகிறாய் உன்   மனஉளைச்சல்களையெல்லாம் காது‌கொடுத்துக் ‌கேட்க இங்கு யாரும் தயாராக இல்லை. அதீத உணர்ச்சி வசப்பட்டது ‌போல கோஷம் ‌போடுகிறாய் உன் உணர்ச்சிகளுக்கு நீ‌யே கூட உண்‌மையானவனாக இல்‌லை. வேஷம் ‌போடுகிறாய். ‌போலியான வார்த்‌தைகளில் உன் கவி‌தைகள் சலனமற்று சவம் போலக் கிடக்கிறதுது. நீ யாருக்காக கவி‌தைகள் எழுதுவதாகக் கூறுகிறா‌யோ அவர்களுக்கு உன் கவி‌தைகள் எட்டுவ‌‌தே இல்‌லை என‌‌வே கவி‌தை அந்நியப்பட்டு நிற்கிறது.


                     மட்டுமல்லாமல் மகாகவி பாரதி, பாரதிதாசன் போன்‌றோரின் வீரியமிக்கவரிகள் கூட அதிகமான  மேடைகளில் அடிக்கடியும் எடுத்தாளப்பட்டதாலும், எடுத்தாள்வோர் சும்மாவும் மேடை அலங்காரத்திற்காக உபயோகித்தமையாலும் அவ்வாறானவர்களின் உன்னதமான கவிதை வரிகள் கூட நீர்த்துப் போய்விட்டன. இதில் நீ வேறு கவிதைகளாக எழுதிக் குவிக்கிறாய் இயந்திரம் போல்.


    கவிஞ,
                      ஒரு நாதசுரவித்வானின்  இசை  நமக்குள்  பரவசமேற்படுத்துகிறது. தனித்தவில் ஒலி கூட நம்மைக் கட்டிப்போட்டுவிடுகிறது. அதிர ஒலிக்கும் ஓரே சீரான பறை ஒலி கூட நம்‌மை ஆடத்துண்டுகிறது. ஏன் சினிமாப்பாடலின் சிலவரிகள் கூட சிலாகிப்பதாகவும் அ‌மைந்து விடுகிறது.  நாதசுரம், தவில், ப‌றை சினிமாப்பாடல் என்பதால் என்‌னைப்பாமரன் என்று நீ ‌கேலியாகப் பார்ப்பது ‌தெரிகிறது. ஆம் பாமரன் தான் இந்த பாமர‌னை உன் கவி‌தைகள் என்ன ‌செய்யப்போகிறது. இந்த பாமரனுக்கு உன் கவி‌தைகளில் என்ன ஒளித்து‌வைத்திருக்கிறாய்? 


            உன் கவி‌தைக‌ளை வாசித்துக் ‌கொண்டு வரும் ‌பொழு‌தே மேல்வரி மறந்து விடுகி‌றதே நீ எனக்கு அந்நியமான ‌மொழியில் ‌பேசுகிறா‌யே, என்ன செய்வது.


இ‌தைப்படி,


             கவி‌தையின் ‌நோக்கம் உவ‌கை ஏற்படுத்துவதும்அறிவுறுத்துவதும், என நி‌ைவில் பதியும் படியாய் “ஹொரேஷ்  ‌ சொன்னார். உவ‌கை நிச்சயம் இருக்க ‌வேண்டு‌மென நி‌னைக்கி‌றேன். உவ‌கையின்றி எதற்குப் பொருட்படுத்த ‌‌வேண்டும்? ஒரு கவிதை‌யை வாசித்தல் இனி‌மை தருவதாகவும் சுவராஷ்யமாகவும் இல்லலையெனில், ‌வேறு ஏதாவது ‌செய்யலா‌மே. ஒரு க‌லைப்ப‌டைப்பு அழகாயில்‌லை என்றால் இ‌தைக் கொண்டு உச்சபட்சமாய் முரண்டுபிடிக்கும் இருண்‌மைக் கவி‌தைகள் உருவாகலாம். அ‌தை நாம் கவனிக்க மாட்‌டோம் (நன்றி புதிய காற்று ‌செப்டம்பர் 2008 பக், 37- அடிக்‌கோடு என்னு‌டையது).


               உன் கவி‌தை உற்சாகமாகவும்,   சுவராஷ்யமாகவும், அழகாகவும் இல்‌லை மட்டுமின்றி பிரோயோ‌ஜனமற்றதாகவும் இருக்கிறது.


               உன் கவி‌தை அலுப்புட்டுகிறது, க‌ளைப்‌பேற்படுத்துகிறது, எரிச்சல் பட‌வைக்கிறது. என‌வேதான் ‌சொல்கி‌றேன்.

      நிறுத்து......
                                                                                                                     என,
                                                                                           ப.பரிதிபாண்டியன்.                                           1

நானும் முயல்கிறேன்
கவிதை செய்ய.
புரிந்து விடுகிறது உனக்கு,
எனக்கும் கூட.
புரியச் செய்வது
கவிதையாகதே!
நான் எங்ஙனம் 
கவிஞனாவது?

                                                                                               
                                                               

Wednesday, December 1, 2010

கவித...எழுதுறாங்கோ

                         சகோதரி,
                                                         உன் கவிதை வாசிக்கக் கிடைத்தது.
                                                            மகா பாக்கியம்.
                                                            உடல்,மன அவஸ்த்தைகளைப்
                                                            பட்டியலிடுகிறாய்,
                                                            எனக்கு அப்ப்ப்படியிருக்கிறதாக்கும் என
                                                            உடல் முறுக்குகிறாய்.
                                                            இது பற்றியெல்லாம் உன் நட்புகளிடம் கூடப்
                                                            பகிறாய்.
                                                            "என்ன... இப்படியெல்லாம் எழுதுகிறாய்?"
                                                            என்றால்,
                                                            "தாக்குவென்கொல்... முட்டுவென்கொல்" என
                                                            அவ்வைத் துணையுடன் வந்து,
                                                            நியாயம் கத்துவாய்.
                                                            ஒன்றுசெய் சகோதரி,
                                                            உடன் மனோதத்துவ டாக்டரைப்பார்.
                                                            எங்கள் பக்கம் ஒருத்தன் இருக்கான்
                                                            இதையெல்லாம் வேப்பிலை அடித்தே
                                                            ஓட்டி விடுவான்.
                                                            எனக்கே அதில் நம்பிக்கையில்லை
                                                            உனக்கு சிபாரிசு செய்யேன்.
                                                            ஆனால்,
                                                            தெருவில் ஒரு கிழவி இருக்கிறாள்
                                                            மோசமான வாய்,
                                                            படிக்கத் தெரியாது.
                                                            அவளுக்கு மட்டும் படிக்கத் தெரிந்து
                                                            உன்னைப் புரிந்தும் கொண்டாளாயின்
                                                            வாயிலிருந்து வரும்பார் வசவு,
                                                            வேண்டாம்  நீ   தாங்காய்...
                                                            சகோதரி,
                                                                       கொஞ்சம் அனுசரிச்சு எழுதேன்.
..

                                                                                                                                                                                                                                                          -பரிதிபாண்டியன்
                                                                                                                                     
Tuesday, November 23, 2010

கதை கதையாம் காரணமாம்

                                         "ராட்ச்சனோட குகைய
                                         அக்காவும் தம்பியும் மெதுவா
                                         எட்டிப் பார்தாங்க,
                                         ராட்ச்சன் கொர்ர்...புர்ர்...ன்னு
                                         கொரட்டவுட்டுத் தூங்கிட்டு இருந்தான்...
                                        அவனோட கை ஒவ்வொன்னும்
                                         பனமரந் தண்டி இருந்திச்சி...
                                        காலு ஒவ்வொன்னும்
                                        ஆல மரந்தண்டி இருந்திச்சி...
                                        பல்லு மொறம் மாதிரி இருந்திச்சி...

                                        அங்கப் பார்த்தா... அண்டாஅண்டாவா
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        வாளிவாளியா சாம்பாரு... சட்டினி...
                                        அக்காவுநு தம்பியும் அவுக்கு அவுக்குன்னு
                                        தின்னாங்க...
                                        வயிறுமுட்டமுட்டத்தின்னாங்க...
                                        அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
                                        வேணுமேனிட்டு,,, ராட்ச்சனோட
                                        வேட்டி ஒன்ன எடுத்து
                                        இட்டிலி... பணியாரம்... தோச
                                        அல்லாத்தையும் மூட்டையாக்கட்டி
                                       அக்காக்காரி தலையில தூக்கிக்கிட்டா...
                                        தம்பி ரண்டு வாளிய எடுத்து
                                       சாம்பாரு... சட்டினிய ஊத்திக்கிட்டான்...
                                      அக்காவுந்தம்பியும் எடுத்தாங்க பாரு
                                       ஒட்டம்... வூடு வந்துதான் நின்னாங்க..."                                        மூன்றாம் வகுப்புத் தோழிகளுக்கு
                                        நான்காம் வகுப்பு கமலி
                                        கதை சொல்லிக் கொண்டிருந்தாள்,
                                        வாயிலூறும் எச்சிலை விழுங்கியபடி.

                                        எங்கோ கவனம் போல
                                        கதையைக் கவனித்துக்
                                        கொண்டிருந்த ஆசிரியை
                                        கமலியின் தலைவருடி
                                        "காலயில என்னம்மா சாப்பிட்ட?"
                                        என்றாள்
                                        "பழையது டீச்சர்" என்று
                                        பதில் வந்த்து.


      
                                                              
              - ப. பரிதிபாண்டியன்

Friday, November 19, 2010

ஓபாமா எங்க எம்.எல்.ஏ

      பள்ளிக் கூடத்துக்கு ஓபாமா வந்தார் எங்க கூட டான்ஸ் ஆடினார். அவரோட ஓய்ப்பும் எங்கக் கூட ஆடினாங்க சந்தோஷமா இருந்திச்சு.

 நேத்தைக்கு எங்க எம்.எல்.ஏ பள்ளியில புதுக்கட்டிடம் திறக்க வந்தார் நாங்க பூத்தட்ட வைச்சுக்கிட்டு வரிசையா நின்னோம்.எம்.எல்.ஏ வந்தோன்ன அவருமேல பூவ வீசிட்டு ஓன்னுக்கிருக்க அவசரமா ஓடினோம்.
                                                            

           பேசாம ஒபாமாவே
எங்க எம்.எல்.ஏ வா
இருந்திருக்கலாம்....                                                              ப.பரிதிபாண்டியன்

Tuesday, November 16, 2010

மனுஷ்ய ‌மைந்தர்களுக்கும் இன்ன பிற கவிதாஜீவிகளுக்கும் கவி சீ‌ரோன் மணிகளுக்கும்

உன்னிடம் அவனிடம் அவளிடம்
உவனிடம் உவளிடம்
எவனிடமாகிலும் எவளிடமாகிலும்
‌‌சொல்ல நி‌னைக்கி‌‌றேன்
‌சொல்லி விடலாம் என்‌றே நி‌னைக்கி‌‌றேன்
எவ்வளவு தந்திரமாக
இருக்கி‌றேன்
எவ்வளவு தந்திரமாக
கவி‌தை ‌செய்கி‌றேன் என்று.
எந்த இருக்கை எனக்கானது
தந்திரமாக ‌யோசிக்கி‌றேன்

நிச்சயமான மனிதர்கள்
உத்தரவாதமான பணயங்கள்
 முத்தங்களின் புரிதல்கள்
‌வெளிச்சப் பகல்கள்
தந்திரமான காரியங்களின்
உலகம் இது.

‌‌வேசியர் விடுதிகள்
கட்டணக் கழிப்ப‌றைகள்
திறந்த ‌வெளி‌மைதானங்கள்
வீடுகளின் படுக்‌கைய‌றைகள்
வகுப்ப‌றை ‌பெஞ்சுகள்
பணியிட நாற்காலிகள்
எல்லாவற்றிலும்
என் இருக்‌கை
தந்திரமாக இருக்கிறது.

‌வேசியர் விடுதி‌யோ
கட்டணக் கழிப்ப‌றை‌யோ
இவற்‌றை விட
கவி‌தை ‌மோசமானதில்‌லை

தந்திரமாக ‌யோசிக்கவும்
மந்திராம் ‌போல் வார்த்‌தைக‌ளைக்
‌கோர்க்கவும்
‌தெரிந்திருக்க ‌வேண்டும்
மட்டு மல்லாது
ஒரு பதிப்பகமும்
மாத ‌வெளியீ‌டொன்றும்
இருப்பின்
நீயும் கவி‌ஞனடா.....
அடா; அடா;அடடா;
நாலல்ல, நாற்பதல்ல, நானுறு பக்கம்
கவி‌தை     செய்யலாம்
                     பெய்யலாம்
                     நெய்யலாம்
                     ‌தைக்கலாம்
                     ‌வெட்டலாம்
                     ஒட்டலாம்
                     கி‌‌ழிக்கலாம்

                    பாரதி 
                                    மன்னித்துவிடு
                                                     நான் தந்திரமாகக்                
                                   கவி‌தை‌செய்பவன்...