Pages

Wednesday, February 23, 2011

நூறு முட்கள் குத்தட்டும் முள் 1
           தலைவனின் கடைசி ஆசையும்
                                     நிறைவேற்றப்பட்டது
           புறம் போக்கு நிலத்தில்
                                 புதைக்கப்பட்டு.முள் 2

             தலைவன் கேட்டான்
                             தன் கலைலறைக்கு
                             அழகிய வாசகம் ஒன்று,
             '' எச்சரிக்கை... சகல வில்லங்கங்களும்
                 இங்கே புதைக்கப்பட்டுள்ளது ''
          என்று எழுதித் தரப்பட்டது.முள் 3

    தமிழய்யாவைப் பார்க்கச் சென்றேன்
   ' தமிழரசி' அவர் மகள் சொன்னாள்
   '' டாடி... வீட்ல இல்ல, அங்கிள் ''Thursday, February 17, 2011

வலி

சின்ன வயதில்
ஒரே கனவு அடிக்கடி வரும்
நிறைய நிறைய பானைகளில்
நிறைய நிறைய சோறு இருப்பதாகவும்
தின்று கொண்டே இருப்பதாகவும்
எப்படி இது . . . அன்று முழுக்கப் பட்டினி.
இன்று என் மகன்
தட்டில் சோற்றைப் பிசைந்து
முகம் சுளித்து ஒதுக்கி வைக்கும் போது
நெஞ்சில் வலி பரவுகிறது.

Sunday, February 6, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-10)

         16
உன்னை அலட்சியப்படுத்தலாம்,
ஒதுக்கிச் செல்லலாம்,
பக்கத்தை அப்படியே புரட்டி விடலாம்
எல்லாம் சரிதான்
நானல்லவா இருபது முப்பது
கொடுத்துப் புத்தகம் வாங்கினேன்.
ஒரு கிலோ அரிசி வாங்கி வரும் பெண்
அதில் கிடக்கும் கல்,கருப்பரிசி
பொறுக்கி மாளாது
திட்டடுவாள். கேட்டிருக்கிறாயா?
நாய் குறுக்கே போகது.
அவளை விடவும் அசிங்க வசவுகள்
அறிவேன் நான்.
என்ன செய்ய,நீ எதிரில் இல்லை.
தவிரவும்,
எழுதும்போது நாகரிகம் காக்க
வேண்டியுள்ளது.
நான், நீ அல்லவே.

Wednesday, January 12, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-9)

 13
சனங்களுக்கு நீ எழுதும்
கவிதைகள் பற்றி
சனங்களுக்கே அக்கறை இல்லை
போலிருக்கிறது.
அவர்கள் பாட்டுக்கு
மண்வெட்டுகிறார்கள்,
கல் சுமக்கிறார்கள்,
மூட்டைத் தூக்குகிறார்கள்,
நடுகிறார்கள், அறுக்கிறார்கள்.
நீ உன் கவிதையில் அவர்களுக்கான
வெளிச்சத்தையும் விடியலையும்
(வெளிச்ச விடியல் எனலாமா)
ஒளித்து வைத்திருப்பதை
அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
என்ன சனங்கள் இவர்கள்?
போகட்டும் போ,
நீ மட்டும் கவிதை செய்வதை
நிறுத்திவிடாதே,
உனக்கே அலுத்துப்போகும் வரை.


 14
உனக்குச் சின்னதாகக்
கொம்பு முளைத்திருக்கிறது.
தலையைச்சற்றி மங்கலாக
ஒளிவட்டம்.
உதட்டில் அலட்சியப் புன்னகை
ஒட்டிக் கொண்டிருக்கிறது.
முகத்தில் புதிய தேஜஸ்
குடியேறியிருக்கிறது.
நடையில் ஒரு திமிர்த்தனம்.
'அதோ, போகிறாரே அவர்தான்'
ஜனங்கள் உன்னைச் சுட்டிப் பேசுகிறார்கள்.
நீ எழுதி அனுப்பிய
'ஜோக்' ஒன்று
வார இதழில் நேற்றுதான்
கவிதையென வெளிவந்திருந்தது.15
இறைச்சிக் கடையின்
கூரையில் அமர்ந்து
கழித்தெறியப்படும் மிச்சங்களுக்காகக்
காத்துக்கிடக்கிறது காகம்.
சம்பவங்களுக்காக நீ.
சுனாமி, கும்பகோணம் தீ என
வருடத்திற்கு இரண்டு மூன்று
நடந்துவிடுகிறது
நீ,
சந்தோசமாகக் கவிதை செய்ய
அமர்ந்து விடுகிறாய்.
முதுகில் வேறு தட்டிக் கொடுத்துக்
கொள்கிறாய்
என்ன. . . எளவுடா இது!


Wednesday, February 23, 2011

நூறு முட்கள் குத்தட்டும் முள் 1
           தலைவனின் கடைசி ஆசையும்
                                     நிறைவேற்றப்பட்டது
           புறம் போக்கு நிலத்தில்
                                 புதைக்கப்பட்டு.முள் 2

             தலைவன் கேட்டான்
                             தன் கலைலறைக்கு
                             அழகிய வாசகம் ஒன்று,
             '' எச்சரிக்கை... சகல வில்லங்கங்களும்
                 இங்கே புதைக்கப்பட்டுள்ளது ''
          என்று எழுதித் தரப்பட்டது.முள் 3

    தமிழய்யாவைப் பார்க்கச் சென்றேன்
   ' தமிழரசி' அவர் மகள் சொன்னாள்
   '' டாடி... வீட்ல இல்ல, அங்கிள் ''Thursday, February 17, 2011

வலி

சின்ன வயதில்
ஒரே கனவு அடிக்கடி வரும்
நிறைய நிறைய பானைகளில்
நிறைய நிறைய சோறு இருப்பதாகவும்
தின்று கொண்டே இருப்பதாகவும்
எப்படி இது . . . அன்று முழுக்கப் பட்டினி.
இன்று என் மகன்
தட்டில் சோற்றைப் பிசைந்து
முகம் சுளித்து ஒதுக்கி வைக்கும் போது
நெஞ்சில் வலி பரவுகிறது.

Sunday, February 6, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-10)

         16
உன்னை அலட்சியப்படுத்தலாம்,
ஒதுக்கிச் செல்லலாம்,
பக்கத்தை அப்படியே புரட்டி விடலாம்
எல்லாம் சரிதான்
நானல்லவா இருபது முப்பது
கொடுத்துப் புத்தகம் வாங்கினேன்.
ஒரு கிலோ அரிசி வாங்கி வரும் பெண்
அதில் கிடக்கும் கல்,கருப்பரிசி
பொறுக்கி மாளாது
திட்டடுவாள். கேட்டிருக்கிறாயா?
நாய் குறுக்கே போகது.
அவளை விடவும் அசிங்க வசவுகள்
அறிவேன் நான்.
என்ன செய்ய,நீ எதிரில் இல்லை.
தவிரவும்,
எழுதும்போது நாகரிகம் காக்க
வேண்டியுள்ளது.
நான், நீ அல்லவே.

Wednesday, January 12, 2011

கவிஞர்களே கவிதைகள் ஜாக்கிரதை!!!(பாகம்-9)

 13
சனங்களுக்கு நீ எழுதும்
கவிதைகள் பற்றி
சனங்களுக்கே அக்கறை இல்லை
போலிருக்கிறது.
அவர்கள் பாட்டுக்கு
மண்வெட்டுகிறார்கள்,
கல் சுமக்கிறார்கள்,
மூட்டைத் தூக்குகிறார்கள்,
நடுகிறார்கள், அறுக்கிறார்கள்.
நீ உன் கவிதையில் அவர்களுக்கான
வெளிச்சத்தையும் விடியலையும்
(வெளிச்ச விடியல் எனலாமா)
ஒளித்து வைத்திருப்பதை
அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
என்ன சனங்கள் இவர்கள்?
போகட்டும் போ,
நீ மட்டும் கவிதை செய்வதை
நிறுத்திவிடாதே,
உனக்கே அலுத்துப்போகும் வரை.


 14
உனக்குச் சின்னதாகக்
கொம்பு முளைத்திருக்கிறது.
தலையைச்சற்றி மங்கலாக
ஒளிவட்டம்.
உதட்டில் அலட்சியப் புன்னகை
ஒட்டிக் கொண்டிருக்கிறது.
முகத்தில் புதிய தேஜஸ்
குடியேறியிருக்கிறது.
நடையில் ஒரு திமிர்த்தனம்.
'அதோ, போகிறாரே அவர்தான்'
ஜனங்கள் உன்னைச் சுட்டிப் பேசுகிறார்கள்.
நீ எழுதி அனுப்பிய
'ஜோக்' ஒன்று
வார இதழில் நேற்றுதான்
கவிதையென வெளிவந்திருந்தது.15
இறைச்சிக் கடையின்
கூரையில் அமர்ந்து
கழித்தெறியப்படும் மிச்சங்களுக்காகக்
காத்துக்கிடக்கிறது காகம்.
சம்பவங்களுக்காக நீ.
சுனாமி, கும்பகோணம் தீ என
வருடத்திற்கு இரண்டு மூன்று
நடந்துவிடுகிறது
நீ,
சந்தோசமாகக் கவிதை செய்ய
அமர்ந்து விடுகிறாய்.
முதுகில் வேறு தட்டிக் கொடுத்துக்
கொள்கிறாய்
என்ன. . . எளவுடா இது!