Pages

Tuesday, February 12, 2013

சுட்டுவிரல்

ஏன் இப்படி எழுத வேண்டியிருக்கிறது?

                தொடர்ந்து "கருக்கல்' படிக்கும், படித்தது குறித்து விருப்புடன் பகிர்ந்து கொள்ளும் நண்பர் ஒருவர், "சுட்டுவிரல்' பகுதியில் இவர்கள் பற்றி இப்படி யெல்லாம் எழுத வேண்டுமா? என்று கேட்டார். "ஏன் எழுத வேண்டும்?' என்பதற்கு "ஏன் எழுதக் கூடாது?' என்பது தான் பதில். கேள்வி தவறு. இவர்கள் குறித்தல்ல, இவர்களின் எழுத்து குறித்தே நமது விமர்சனம். நமக்கென்ன, இவர்கள் அங்காளி, பங்காளிகளா? இப்படியெல்லாம் இவர்கள் எழுதலாம் என்றால், நான் ஏன் எழுதக் கூடாது?
                "நல்லதாக எழுதுங்க... நாலு பேர் படிப்பது போல எழுதுங்க... வீட்டி லுள்ளோர் அனைவரும் படிக்கவும், பகிர்ந்து கொள்ளவும் எழுதுங்க...' என்றால், விசுவாமித்திரமுனி கணக்கா, "ஏ, பண்பாட்டுக் காவலனே... ஒழுங்கு வாதியே... தமிழ்வாத்தியே... நீ நாசமத்துப் போ' என்று சபித்தால் என்ன செய்ய? வெறுப்பேற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொடுக்கப்படும் அடை மொழி களால் என்ன ஆகிவிடப் போகிறது? நாம் சார்ந்துள்ள சமூகத்திற்கு என்ன தருகிறோம் என்பது தான், நாம் சுமந்து திரியும் ஒளிவட்டத் தோரணைக்குச் சரியாக இருக்கும்.
                பொது வெளிக்கு வந்துவிட்டால் விமர்சனம் தவிர்க்க முடியாதது. நான் பரம்பரையாக எழுதிக் கொண்டிருப் பவனல்ல. என் பாட்டன் பூட்டனுக் கெல்லாம் எழுத்துக்களெல்லாம் பூச்சி பூச்சியாகத் தான் தெரிந்திருக்கும். நான் எழுத்தாளனல்ல, கவிஞனல்ல, ஒரு வாசகன். நான் வாசித்துக் கொண்டுதான் இருந்தேன். உங்கள் எழுத்துத்தான் என்னை எழுதும்படி செய்கிறது. நீங்கள், இப்படி எழுதுவதை நிறுத்துங்கள்; நானும் பழையபடி வாசிக்கப் போய் விடுகிறேன்.
எனக்கும் சில பாட்டிகள் இருக்கிறார்கள்.
                சென்ற இதழின் சுட்டுவிரல் குறித்து கவிஞர் நா.விச்வநாதன் ஒரு நீண்ட கடிதம் அனுப்பியுள்ளார். (அது தனியே ஒரு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது) அவருடைய கடிதம் குறித்து சில சொல்லியாக வேண்டும். பொதுவாக, விஷயம் - விளக்கம் - விளக்கத்திற்கு விளக்கம் என அரைத்ததையே அரைப்பது சரியல்ல தான். எனினும் சில கூற வேண்டியிருக்கிறது. நண்பர்கள் பொறுத் தருள்க.
                நா.வி. "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று இலக்கணத்தை எடுத்துக்கூறியுள்ளார். ஆமாம், எல்லாச் சொல்லும் பொருள் தரும், பொருள்தரா விடில் அது எப்படி சொல் ஆகும்? மரம் - பொருள் தருகிறது - சொல், மம்ர - எழுத்து கள் நிரல்பட இருக் கிறது, ஒலி இருக் கிறது. பொருள் இல்லை - எனவே சொல் இல்லை. பால பாடம். கெட்ட பொருள் தரும் சொற்கள் இலக்கியம் என்ற பெயரில் வீட்டிற்குள் நுழையத்தான் வேண்டுமா? அது குறித்துத் தான் நாம் பேசுவது. இருக்கட்டும்.
                போகிற போக்கில், நா.வி. சாமியையே புணரக் கூப்பிட்ட ஆண்டாளைத் தனக்கு முப்பாட்டி உறவு எனக் கூறிக்கொள்கிறார். இருக்கட்டுமே, நமக்கொன்றும் ஆட்சேபம் இல்லை. அவ்வளவுக்குச் சொல்லிக் கொள்ளும் படியான பாரம்பரியப் பெருமை நமக்கில்லை. நம் பாட்டிகளெல்லாம் பேச்சி, பெரியாச்சி, காத்தாயி, மாரியாயி இப்படித்தான்.
                நா.வி. நாற்பது ஆண்டுகளாக எழுத்துத் துறையில் இருக்கிறார். நல்ல எழுத்தாளர், நல்ல கவிஞர். அவரும் கூட "தமிழ் வாத்தியார்கள்...' என்று பல்லைக் கடிக்கிறார்.வருத்தமாக இருக்கிறது. தமிழ் வாத்தியார்கள், "வெண்ணிற ஆடை மூர்த்திக்கும், சிலநவீன எழுத்தாளர்களுக்கும் அப்படி என்னதான் கெடுதல் செய்திருப்பார்கள்? என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை!
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
                ஐம்பதுகளில் “தமிழ் என் மூச்சு” என்ற குரல் உரத்துக் கேட்டுக் கொண்டி ருந்தது. இத்தகையக் குரல் எங்கேயோ, எவருக்கோ உறுத்தலாக இருந்திருக்கும் போலிருக்கிறது. "தமிழ் என் மூச்சு' என்ற குரல் எழுந்தால், அந்த உணர்வு இருந்தால், மேலோங்கினால் தங்களின் பிழைப்புவாத புத்தி ஜீவித்தனத்திற்கு இடைஞ்சலாக இருக்குமோ, மேன்மைக்குரிய தங்கள் இருப்பிற்கு இடையூறாக இருக்குமோ, தலை தூக்க இயலாததாகிவிடுமோ எனச் சிந்தித்தவர்களுக்கு, தமிழை நீசபாஷை எனக் கூறிக் கொண்டிருக்கிறோமே அதற்கும் இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்று ஆலயங்களில் எழுதி வைத்திருக்கிறோமே அதற்கும் கேடு சூழுமோ என்று எண்ணியவர்களுக்கு, அந்தக் குரலில், உணர்வில் உடைப்பு ஏற்படுத்த வேண்டுமே என்று சிந்தித்தவர் களுக்கு 1973 ஆம் ஆண்டு ஒரு கவிஞன் கிடைத்தான். ஞானக்கூத்தன்!
                ஒரு செய்தியைப் போல, உபதேசம் போல, மிகுந்த புத்திசாலித் தனமாகவும், தந்திரமாகவும் ஒரு கவிதை போன்ற வரி இங்கு இறக்கிவிடப்பட்டது. “எனக்கும் தமிழ்தான் மூச்சு, ஆனால் பிறர் மேல் விடமாட்டேன்” (ஞானகூத்தன் எழுதிய "அன்று வேறு கிழமை') நமக்கும் "சரிதானே' என்று பட்டது. அகிம்சை புரிந்தது. பொருள் விளங்கிக் கொள்ளவில்லை. அன்று, இது குறித்து எந்தத் தமிழறிஞரும், தமிழ் கவிஞரும் கவலைப்பட்டதாகவோ, வினவியதாக வோத் தெரியவில்லை.
                "தமிழ் எந்த காலத்தில் எவனின் மீது மூச்சு விட்டது? எந்த மொழியை நீச பாஷை என்று தள்ளி வைத்தது? உன் குலத்தார், கோத்திரத்தார், பந்துமித்திராள் மீது என்றேனும் பாய்ந்து பிறாண்டியதா எவரும் கேட்கவில்லை. "யாவரும் கேளிர்' என ஏமாந்து நிற்பது தானே நமது வழக்கம். "இளையதாக முள்மரம் களைக'. களைய வில்லை. ஆதலால், இன்று ஆழ வேர் விட்டு அகலக் கிளை பரப்பி நம் உடலை அல்ல, உயிரைக் கிழிக்கிறது. எனவே தான் நாம் நாகசாமிக்கு பதில் கூற வேண்டி யிருக்கிறது. முள் மரங்களின் கிளைகளை இருப்பிடமாகக் கொண்டு நாகங்கள் நஞ்சைக் கக்கிக் கொண்டிருக்கின்றன.
                நாகசாமி, தொல்லியல் அறிஞர். ஆரியம் தமிழுக்கு எழுத்தையும் சொல்லையும் ஏன் இலக்கணத்தையும் காவியங்களையும் கடன் தந்துள்ளதாம். ஆரியம் தமிழுக்கு நாகரிகம் கற்றுத் தந்ததாம். சொல்கிறார் தொல்லியல் அறிஞர். வாய்மூடி மௌனமாய் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
                தமிழின் மீது இவ்வாறான திட்ட மிட்டத் தாக்குதல், இன்று நேற்றல்ல ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
                தொல்காப்பியனையே சமதக் கினியின் மகன் எனவும் பரசுராமனின் உடன் பிறந்தான் எனவும் கட்டப்பட்டக் கதைக ளெல்லாம் செல்லுபடியாகாமல் போனது தமிழின் நல்ல காலம் தான்.
                தமிழக அரசின் முன்னாள் தொல்லியல் துறை இயக்குநர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தின் கண்ணாடி (பட்ங் ஙண்ழ்ழ்ர்ழ் - பஹம்ண்ப் ஹய்க் நஹய்ள்ந்ழ்ண்ற்) என்று சமீபத்தில் தான் எழுதிய நூலில் தமிழ் தனக்கான எழுத்து முறையை பிராமணர்களிடமிருந்து பெற்றது என்றும், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு முதலியவை சமஸ்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
                இந்தச் செய்தியை தமிழ் தேசிய பொதுவுடைக் கட்சியின் "தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்' இதழின் வாயிலாகவே அறிய நேர்ந்தது. திரு.பெ.மணியரசன் மட்டுமே இது பற்றிய கவலையையும் கோபத்தையும் தமிழ் மக்களிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
                தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முது முனைவர் இளங்கோ, தமிழகத் தொல்பொருள் ஆய்வுத் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன், புலவர் மறைமலை இலக்குவனார், முனைவர் அரசேந்திரன், முனைவர் பூங்குன்றன், முனைவர் இரா.மதிவாணன், கோவை ஞானி, முனைவர் ஜெயதேவன், முனைவர் மணியன், புலவர் கி.த.பச்சி யப்பன், த.தே.பொ. கட்சித் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் கலந்து கொண்ட கலந் தாய்வுக் கூட்டம் 27.07.2012 அன்று சென்னை எழும்பூர் "இக்சா' நடுவத்தில் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அவர்கள் தலைமையில் நடை பெற்றுள்ளது. கலந்துரையாடலில் தமிழறிஞர்கள் "நாகசாமியின் நாச வேலையை'த் தோலுரித்துக் காட்டித் தமிழின் தொல் பெருமையை நிலை நாட்டியுள்ளனர்.
                முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கலந்துரையாடல் பற்றிய செய்தி எந்த நாளிதழிலும் வெளி வரவில்லை. எந்தத் தொலைக்காட்சியும் இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அந்தக் கவிதை வரிகளின் சூட்சுமம் இப்போது புரிந்திருக்கும். தமிழ் மீதும் தமிழரின் மீதும் பிறனின் மூச்சுக் காற்று மட்டுமல்ல அசிங்கங்களும் அவதூறுகளும், அதிகாரங் களும், அச்சுறுத்தல்களும் செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. “தமிழா, நீ மூச்சு விடாதே” எனச் சொல்லித் தரப்படுகிறது. ஒருமுறையல்ல நூறாயிரம் முறைச் சொல்லுவேன் “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”.
கம்பனாகத்தான் இருக்கட்டுமே!
                ஏறத்தாழ நாற்பது ஆண்டு களாயிற்று, அந்தவரி எழுதப்பட்டு. இதை ஏன் இப்பொழுது நோண்ட வேண்டும்? தோன்றலாம். தவறில்லை, காரணம் இருக்கிறது. ஞானக்கூத்தன் எழுதிய அதே “அன்று வேறு கிழமை” நூலில் வெளியிடப்பட்டுள்ள முதல் கவிதையின் முதல் நான்கு வரிகளைக் கீழே தருகிறேன். படித்ததும் உங்களுக்கு என்ன உணர்வு தோன்றுகிறதோ, அதே உணர்வுதான் எனக்கும் தோன்றியது.
                “தவளையின் கூச்சல் கேட்டுத்
                தமிழ்க் கூச்சல் என்றான் கம்பன்
                ஆயிரம் வருஷம் போச்சு
                போயிற்றா தவளைக் கூச்சல்”
                இந்தக் கவிதை தமிழை இவ்வாறு இழித்து, நீண்டு செல்கிறது.
                1973 ஆம் ஆண்டு அன்னம் வெளியீடாக வெளியிடப்பட்டு இரண்டாம் பதிப்பு 1980-லும், மூன்றாம் பதிப்பு 1991-லும் வெளியிடப்பட்டிருக்கிறது. இக்கவிதை போல தமிழையும், தமிழ் பேசும் சொற்பொழிவாளனையும், இனத்தையும் கேலி பேசும் பல கவிதைகள் இந்நூலில் காணக் கிடைக்கின்றன.
                என்ன சொல்கிறது அந்தக் கவிதை வரிகள்? “தமிழ் பேச்சு அல்ல கூச்சல், அதுவும் தவளையின் கூச்சல். இப்படி கம்பன் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர் சொன்னான். அந்தக் கூச்சல் ஓய்ந்த பாடில்லை” என்னால் இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களுக்கு வேறு விதமாகப் புரிகிறதா? “தமிழ்க் கூச்சல் தவளைக் கூச்சல்” என்று சொன்னது கம்பனாகவே இருக்கட்டும். அதனால் என்ன அவனும் கூட தமிழுக்கு எதிர் நிலையில் நின்று பேசுவதால், எந்தக் குழப்பமுமின்றி எதிர்க்கப்பட வேண்டி யவனே. இப்படியான கவிதைகளை ரசித்துக் கொண்டிருந்துவிட்டு, இப்போது நாகசாமிகள் மீது கோபப்படுகிறோம்.
தமிழென் மூச்சுக் காற்று
இதிலென்ன உனக்குப் போச்சு?
அமுதென்பேன், உயிரெனச் சொல்வேன்,
உனக்கெங்கு வேர்க்கலாச்சு?
தமிழ்க்கூச்சல் தவளைக் கூச்சல்
என்றெந்த மயிரான் சொன்னான்? எந்தக்
கழிசடை உனக்குச் சொன்னான்? நீ
கழித்துளாய் கவிதை போன்று:
"மூத்திரம், குசு' என கழிப்பறை
உவமை சொல்லி, தமிழ்க்
கவிதையை அசிங்கம் செய்தாய்
அன்று வேறு கிழமை - உன் புளிச்
சேப்பமெல்லாம் கவிதையாச்சு;
இன்று வேறு கிழமை அண்ணே
இனியாவது கவிதை பண்ணேன்!