அக்காவும் தம்பியும் மெதுவா
எட்டிப் பார்தாங்க,
ராட்ச்சன் கொர்ர்...புர்ர்...ன்னு
கொரட்டவுட்டுத் தூங்கிட்டு இருந்தான்...
அவனோட கை ஒவ்வொன்னும்
பனமரந் தண்டி இருந்திச்சி...
காலு ஒவ்வொன்னும்
ஆல மரந்தண்டி இருந்திச்சி...
பல்லு மொறம் மாதிரி இருந்திச்சி...
அங்கப் பார்த்தா... அண்டாஅண்டாவா
இட்டிலி... பணியாரம்... தோச
வாளிவாளியா சாம்பாரு... சட்டினி...
அக்காவுநு தம்பியும் அவுக்கு அவுக்குன்னு
தின்னாங்க...
வயிறுமுட்டமுட்டத்தின்னாங்க...
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
வேணுமேனிட்டு,,, ராட்ச்சனோட
வேட்டி ஒன்ன எடுத்து
இட்டிலி... பணியாரம்... தோச
அல்லாத்தையும் மூட்டையாக்கட்டி
அக்காக்காரி தலையில தூக்கிக்கிட்டா...
தம்பி ரண்டு வாளிய எடுத்து
சாம்பாரு... சட்டினிய ஊத்திக்கிட்டான்...
அக்காவுந்தம்பியும் எடுத்தாங்க பாரு
ஒட்டம்... வூடு வந்துதான் நின்னாங்க..."
மூன்றாம் வகுப்புத் தோழிகளுக்கு
நான்காம் வகுப்பு கமலி
கதை சொல்லிக் கொண்டிருந்தாள்,
வாயிலூறும் எச்சிலை விழுங்கியபடி.
நான்காம் வகுப்பு கமலி
கதை சொல்லிக் கொண்டிருந்தாள்,
வாயிலூறும் எச்சிலை விழுங்கியபடி.
எங்கோ கவனம் போல
கதையைக் கவனித்துக்
கொண்டிருந்த ஆசிரியை
கமலியின் தலைவருடி
"காலயில என்னம்மா சாப்பிட்ட?"
என்றாள்
"பழையது டீச்சர்" என்று
பதில் வந்த்து.
- ப. பரிதிபாண்டியன்
நல்ல பதிவு.
ReplyDelete