Pages

Tuesday, November 16, 2010

மனுஷ்ய ‌மைந்தர்களுக்கும் இன்ன பிற கவிதாஜீவிகளுக்கும் கவி சீ‌ரோன் மணிகளுக்கும்

உன்னிடம் அவனிடம் அவளிடம்
உவனிடம் உவளிடம்
எவனிடமாகிலும் எவளிடமாகிலும்
‌‌சொல்ல நி‌னைக்கி‌‌றேன்
‌சொல்லி விடலாம் என்‌றே நி‌னைக்கி‌‌றேன்
எவ்வளவு தந்திரமாக
இருக்கி‌றேன்
எவ்வளவு தந்திரமாக
கவி‌தை ‌செய்கி‌றேன் என்று.
எந்த இருக்கை எனக்கானது
தந்திரமாக ‌யோசிக்கி‌றேன்

நிச்சயமான மனிதர்கள்
உத்தரவாதமான பணயங்கள்
 முத்தங்களின் புரிதல்கள்
‌வெளிச்சப் பகல்கள்
தந்திரமான காரியங்களின்
உலகம் இது.

‌‌வேசியர் விடுதிகள்
கட்டணக் கழிப்ப‌றைகள்
திறந்த ‌வெளி‌மைதானங்கள்
வீடுகளின் படுக்‌கைய‌றைகள்
வகுப்ப‌றை ‌பெஞ்சுகள்
பணியிட நாற்காலிகள்
எல்லாவற்றிலும்
என் இருக்‌கை
தந்திரமாக இருக்கிறது.

‌வேசியர் விடுதி‌யோ
கட்டணக் கழிப்ப‌றை‌யோ
இவற்‌றை விட
கவி‌தை ‌மோசமானதில்‌லை

தந்திரமாக ‌யோசிக்கவும்
மந்திராம் ‌போல் வார்த்‌தைக‌ளைக்
‌கோர்க்கவும்
‌தெரிந்திருக்க ‌வேண்டும்
மட்டு மல்லாது
ஒரு பதிப்பகமும்
மாத ‌வெளியீ‌டொன்றும்
இருப்பின்
நீயும் கவி‌ஞனடா.....
அடா; அடா;அடடா;
நாலல்ல, நாற்பதல்ல, நானுறு பக்கம்
கவி‌தை     செய்யலாம்
                     பெய்யலாம்
                     நெய்யலாம்
                     ‌தைக்கலாம்
                     ‌வெட்டலாம்
                     ஒட்டலாம்
                     கி‌‌ழிக்கலாம்

                    பாரதி 
                                    மன்னித்துவிடு
                                                     நான் தந்திரமாகக்                
                                   கவி‌தை‌செய்பவன்...

2 comments:

  1. கொஞ்சம் தான் புரிந்தது,புரிந்தவரைக்கும் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நண்பரே! உங்கள் கவிதைகள் இங்கு பல பயல்களுக்கு தேவைப்படுகின்றன...சிலர் சொல்ல முடியாமல் மெல்ல முடியாமல் நீண்ட பயணத்தில் சிறுநீரை அடக்குவதுபோல் நெளிகிறார்கள். பல கவிதைகளை படித்த அசதி உங்கள் கவிதை படித்து ரசிக்கும் போதுதான் நீங்குகிறது...தயங்காமல் நிச்சயம் தொடர்ந்து எழுதுங்கள். நம்ம 'கன்னத்திலேயும் இச்'சோ பளாரோ அடிக்கடி ஒன்று விட்டுவிட்டு போகவும்..அப்புறம் நிறைய இடுகைகள் திரும்பத்திரும்ப வருவதுபோல் இருக்கிறது, கமெண்ட் கலர் மாற்றியிருப்பதால் ஒரு இடுகையில் அது தெரியவேயில்லை, கருத்துரைக்குக் word verification -ஐ நீக்கிவிடவும் அப்போதுதான் எல்லோரும் கருத்துரையிட எளிதாகும் அதற்கு பதிலாக Comment moderation -ஐ activate செய்துகொள்ளலாம். முக்கியமான votting widget தவிர எல்லாமும் வேண்டாம். load ஆகும் வேகம் அதனால் குறையக்கூடும் . அறிவுரை சொன்னதற்கு மன்னிக்கவும்..